A.R. Rahman
Kurukku Siruthavale
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே..!!
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே..!

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆ.....ன..தே..........
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்துறியே

கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசடியே

வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போ...கல..

அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இள
நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே

ஒம்முதுக தொலச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ

உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூ..சு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிருத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்...ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்...மாத்துவேன்யா