Ostan Stars
Enthan Yesu Ennalum
எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே
அவர் உள்ளங்கையில்
என்னை வரைந்தாரே
எப்போதும் என்னை பார்க்கவே

எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே


1. தாயைப் போல தேற்றுகிறார் அன்பு காட்டுகிறார்
ஏந்திக் கொள்ளுவார்
என்றும் தாங்குவார்

கோழியும் தன் குஞ்சுகளை கூவி
தமது சிறகால் மூடுவது போல
ஆபத்திலே நான் கூப்பிடும் போது
ஓடோடிவந்திடுவார்
சிறகால் மூடிடுவார்

எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே

2. அக்கினிபோன்ற சோதனையில் கடும்வேதனையில்
கரம் நீட்டீயே
என்னை தாங்குவார்

எனக்கு என்று பெலன் ஒன்றும் இல்லையே
என் பெலமெல்லாம்
இயேசுவே இயேசுவே
அவர் பெலத்தாலே
தரும் ஜெயத்தாலே
மலைகளை நொறுக்கிடுவேன்
மதிலையும் தாண்டிடுவேன்

எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே


3. வெள்ளம்போல சாத்தானும் வந்துமோதினாலும்
என் தேவனோ
பட்சமாய் நிற்பார்

கர்த்தர் எனக்காய்
யுத்தம் செய்யவாரே
எதிலும் எனக்கு ஜெயங்கொடுப்பாரே
இது வரை காத்தவர்
இனியும் காப்பார்
என்றென்றும் நடத்திடுவார்
கூடவே இருந்திடுவார்

எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே
அவர் உள்ளங்கையில்
என்னை வரைந்தாரே
எப்போதும் என்னை பார்க்கவே

எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே

Hallelujah