Ostan Stars
Unakkedhiraana aayuthangal
உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகனே
உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகன

நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை



1.உன்னை நான் காப்பாற்றி
அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன்
உன்னை நான் காப்பாற்றி
அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன்

இரவினிலும் பகலினிலும்
சேதமில்லாமல் காத்திடுவேன்
இரவினிலும் பகலினிலும்
சேதமில்லாமல் காத்திடுவேன்

உன்னை கொண்டு மலைகளையும்
குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன்
உன்னை கொண்டு மலைகளையும்
குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன்
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை


2.ஏழு மடங்கு அக்கினியில்
சேதமில்லாமல் காத்திடுவேன்
ஏழு மடங்கு அக்கினியில்
சேதமில்லாமல் காத்திடுவேன்

ஒரு வழியாய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடச்செய்வேன்
ஒரு வழியாய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடச்செய்வேன்

உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது
தடை செய்ய யாருமில்லை
உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது
தடை செய்ய யாருமில்லை

நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை

3.சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய்
சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய்
சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய்
சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய்

உனக்கெதிராய் எழுதப்படும்
சட்டங்களை நான் மாற்றிடுவேன்
உனக்கெதிராய் எழுதப்படும்
சட்டங்களை நான் மாற்றிடுவேன்

உன்னைக் கொண்டு தேசத்திலே
என் நாமம் முழங்கச் செய்வேன்
உன்னைக் கொண்டு தேசத்திலே
என் நாமம் முழங்கச் செய்வேன்

நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகனே
உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகன